பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடும் பொருட்டு காலாண்டு அரையாண்டு விடைத்தாள்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் திருச்செங்கோடு இணைந்து கல்வி மாவட்டங்கள் உள்ளன. நீர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 20 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுத இருந்தனர்.
கரோனா தொற்று பரவல், பொது முடக்கம் போன்றவற்றால் தேர்வு நிறுத்தப்பட்டதுடன் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை யடுத்து காலாண்டு தேர்வு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்களை கணக்கிட கல்வித்துறை மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. இதேபோல் பதினோராம் வகுப்பில் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களை எழுதாத மாணவ, மாணவியரின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இப்பணி திங்கள்கிழமை தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 303 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் விடைத்தாள்களை ஒப்படைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நாமக்கல் டிரினிடி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் மூ.ஆ. உதயகுமார் திங்கள்கிழமை காலை 25 பள்ளிகளிடம் இருந்து விடைத்தாள்கள், மதிப்பெண் பதிவேடு, மதிப்பெண் பட்டியல் உள்ளிட்டவற்றை நேரடியாக சமர்ப்பித்தனர்.
No comments:
Post a Comment