Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 9, 2020

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...புதுச்சேரியிலும் பொதுத்தேர்வு ரத்து! - கல்வி அமைச்சர் அறிவிப்பு!


தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியிலும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். நேற்று தெலுங்கானாவில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment