Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 2, 2020

சலூன் கடைகளில் ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு!



சலூன் கடைகளில் ஆதார் விவரத்தை அவசியம் பெற வேண்டுமென, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், சலூன் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு விவரங்களை திரட்டவும், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கவும், அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகிறது.
அந்தவகையில், சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன், ஆதார் விவரங்களும் சேகரிக்க வேண்டுமென, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சலூன் கடைகளில் சானிடைசர் மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும் என்றும், ஒருவருக்கு பயன்படுத்திய பிளேடினை அடுத்தவருக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment