Join THAMIZHKADAL WhatsApp Groups

பள்ளிகள் திறக்கும் வரை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிர்வாக பணி வழங்க, பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், அரசு பள்ளிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஓவியம், கலை, தையல், தோட்டக்கலை உள்ளிட்ட, பல்வேறு சிறப்பு பாடங்களை கற்று கொடுக்கின்றனர்.மேலும், கல்வி அலுவலகங்களுக்கு கோப்புகளை எடுத்து செல்லுதல், தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக இருத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்வர்.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படாததால், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பாடம் கற்பிக்கும் வேலை இல்லை. ஆனால், அவர்களுக்கு சம்பளம் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, பகுதி நேர ஆசிரியர்களை, பள்ளி நிர்வாக பணியில் ஈடுபடுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment