Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 25, 2020

இது கொரோனா காலம்... சர்க்கரை நோயாளிகள் கவனம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

''சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாத நோயாளிகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர்களை காப்பாற்றுவது கடினம்,'' என்கிறார் கோவை அரசு மருத்துவமனை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் வெண்கோ பிரசாத்.கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலில், சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?ஹை சுகர், லோ சுகர் உள்ளவர்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவை, கண்டிப்பாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம். கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களை காப்பாற்றுவது கடினம். கொரோனா இறப்பு சதவீதத்தில், இது போன்ற நோயாளிகள்தான் அதிகம் இறந்துள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இறப்பு, 10 மடங்கு அதிகம். அதனால், சர்க்கரை நோயாளிகள் பிறரை விட, கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். நோய் தொற்று வராமல் இருக்க, சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்? முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

விசேஷ நிகழ்ச்சிகள், வெளியூர் பயணம் கூடாது. உணவு கட்டுப்பாட்டை மீறக்கூடாது. வீட்டில் உள்ளவர்கள் ஜாலியாக சாப்பிடுகிறார்கள் என்பதற்காக, இவர்களும் சாப்பிட கூடாது. குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும்.

மாத்திரை, மருந்து மற்றும் ஊசி போடுவதை தவிர்க்க கூடாது. வழக்கத்துக்கு மாறாக உடல் உபாதை இருந்தால், உடனே டாக்டரை பார்க்க வேண்டும்.நடைப்பயிற்சிக்கு போக முடிவதில்லையே...? வாக்கிங்தான் போக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அது மட்டும்தான் உடற்பயிற்சியா...

வீட்டு மொட்டை மாடி, வராண்டா மற்றும் இடம் இருந்தால் வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். மாடிப்படி ஏற முடிந்தால் ஏறலாம். தனியாக இருந்து எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்யலாம்.சர்க்கரை நோயாளிகள், குறிப்பிட்ட யோகா பயிற்சியை மட்டும்தான் செய்யவேண்டும். இணைய தளத்தில் உடற்பயிற்சிக்கு என, ஏராளமான 'ஆப்ஸ்' உள்ளது.

அதை பார்த்து முடிந்ததை செய்யலாம். உணவு கட்டுப்பாடுதான் முக்கியம்.ஊசி, மருந்து, மாத்திரைகளில் மாற்றம் தேவையா? சர்க்கரை திடீரென்று அதிகம் ஆனாலோ, குறைந்தாலோ உடனே டாக்டரை பார்க்க வேண்டும். அவர் பரிந்துைரக்கும் மருந்துகளை பின்பற்ற வேண்டும். இந்த சூழ்நிலையில் உங்கள் டாக்டரை பார்க்க முடியவில்லை என்றால், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கொரோனா தொற்று ஏற்படாத சூழலில், சர்க்கரை நோயாளிகள் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.சர்க்கரை நேயாளிகளுக்கு சந்தேகம் இருந்தால், காலை, 10 முதல் 10:30 மணி வரை, 82203 30350 என்ற எண்ணில், டாக்டரிடம் பேசலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News