பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு வழங்காமல் இருப்பில் வைக்கப்பட்டுள்ள முக கவசங்களை ஒப்படைக்கும்படி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இந்த பரபரப்புக்கு மத்தியில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் ஜூன் 15ம் தேதி நடப்பதாக இருந்தது. மாணவர்களின் பாதுகாப்புக்காக, தலா 3 முக கவசங்கள் இலவசமாக வழங்க அரசு அறிவுறுத்தி இருந்தது.இதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள், 95 சதவீத பேருக்கு கடந்த திங்கள் அன்று, ஹால் டிக்கெட்டும், 2 முக கவசங்களும் வழங்கப்பட்டு விட்டன. இரு தேர்வுக்கு பின் மீதி ஒரு முக கவசம் வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, தேர்வு ரத்தானதால், இருப்பில் உள்ள, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான முக கவசங்கள் மற்றும் உடல் வெப்பநிலை அளவிடும் கருவிகளையும் திரும்ப ஒப்படைக்க, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment