Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒரு சிலருக்கு ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படும். அதிக டென்ஷன் பதட்டம் போன்ற பிரச்சனைகளால் இது ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். இந்த தலை வலி ஏற்படும் பொழுது தலைவலியோடு சேர்ந்து ஒற்றைக் கண்ணும் வலிக்கும். இது பலருக்கும் மிகப் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. தங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த ஒற்றைத் தலைவலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஒற்றைத் தலைவலி மேலும் பலவித வியாதிகளுக்கு வழிவகுக்கும் எனவும் நம்புகிறார்கள். இந்த ஒற்றைத் தலைவலியானது தலைச்சுற்று, வாந்தி, போன்ற பிரச்சினைகளும் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஒற்றைத் தலைவலி உடனடியாக சரி செய்வதற்கு கடைகளில் தலைவலி மாத்திரைகள் கிடைக்கிறது. அதை உபயோகித்து வருகின்றனர் பலரும். ஆனால் அந்த தலை வலி மாத்திரைகளின் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. தலைவலி மாத்திரைகள் வலி நிவாரணிகள் போன்ற மாத்திரைகளை நாம் தினமும் எடுத்து வந்தால் கிட்னி பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே வலி நிவாரணி தலைவலி மாத்திரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இது போன்ற பிரச்சினைகளை இயற்கையாக விரட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிலும் இந்த தலைவலி பிரச்சனையை இயற்கையாகவே வீட்டிலிருந்தே விரட்டிவிடலாம்.
No comments:
Post a Comment