Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 15, 2020

அனுமதியின்றி மாணவர் சேர்க்கை தொடங்கக்கூடாது! - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மேல் நிலை வகுப்புகளுக்கான சேர்க்கையை தொடங்குதல் குறித்து பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பல தனியார் பள்ளிகள் 11ம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளது. இதுவரை மேல்நிலை வகுப்புகளுக்கு 600 மதிப்பெண் முறையே நடைமுறையில் இருந்த நிலையில் கல்வித்துறை 500 மதிப்பெண் கொண்ட புதிய பாடத்தொகுப்புகளை இந்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய உள்ளது, மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் 500 அல்லது 600 மதிப்பெண்கள் கொண்ட பாட தொகுப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய 500 மதிப்பெண் பாடத்தொகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் உரிய அனுமதி வாங்க வேண்டியுள்ளது. ஆனால் பல தனியார் பள்ளிகள் உரிய அனுமதி வாங்காமலே 500 மதிப்பெண் பாடத்தொகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள பள்ளிக்கல்வித் துறை 500 மதிப்பெண் பாடத்தொகுப்பிற்கு முறையான அனுமதி வழங்கும் முன்னரே சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

1 comment:

  1. காலத்திற்கு ஏற்றார்போல ஆசிரியர்களும்
    கற்பித்தல் திறனை மாற்றிகொள்ள வேண்டும்

    ReplyDelete

Popular Feed

Recent Story

Featured News