Join THAMIZHKADAL WhatsApp Groups

புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டியது, இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கிறது. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பது அன்றைய வாசகம். ஆனால், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே. மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மையமாக மரங்கள் திகழ்கின்றன. மண்ணரிப்பு ஏற்படாமல் தடுத்து மண்வளம் பாதுகாக்க அடர்ந்த மரங்கள் உதவுகின்றன. மழை பொழியவும், உலகம் பாலைவனமாவதை தடுக்கவும் மரங்கள் உதவுகின்றன.
மனித சமுதாயத்துக்கு மரங்கள் கொடுக்கும் பலன்கள் ஏராளம் என்ற நிலையில், அதிசய மரம் ஒன்று சுவையான தண்ணீரை தருவது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. மட்டி வகையை சேர்ந்த இந்த மரங்கள் தன் பெரிய தண்டுகளில் தண்ணீரை சேமிக்கின்றன. தண்டு பகுதியை லேசாக வெட்டினால் அதிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. இது மிகவும் சுத்தமான குடிநீராக உள்ளது. பல சமயங்களில் காடுகளில் பயணம் மேற்கொள்பவர்களின் தாகத்தை இந்த மரங்கள் தீர்க்கின்றன.
இதுபோன்ற மரங்களை அதிகமாக வளர்க்க அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றது. அரசு பூங்கா, அலுவலகங்கள், தனியார் தோட்டங்கள், வயல்கள் என அனைத்து இடங்களிலும் இயன்றவரை இது போன்ற மரங்களை பயிரிட்டால் நன்றாக இருக்கும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment