Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. விடுபட்ட 12 ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் இன்று அறிவித்தார்.
பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அரசு அடுத்த அறிவிப்பு விடுக்கும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் திறக்கக் கூடாது என்று அரசு தேர்வு இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வு இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment