Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 19, 2020

உளுந்தும் வெந்தயமும் போட்டா முடியோட வளர்ச்சியை தடுக்கவே முடியாதாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
முடியோட வளர்ச்சிக்கு என்ன செய்தாலும் அப்படியே முடிக்கு தேவையான போஷாக்கும் இருந்தால் தான் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

கூந்தல் வளர்ச்சி. ஆண்கள், பெண்கள் என அனைவருமே இதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தோற்றத்தின் அழகை கம்பீரமாக காண்பிப்பதில் கூந்தலுக்கும் தனி இடம் உண்டு. கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கூந்தலின் வெளிப்புறத்துக்கு மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் போஷாக்கு அளிக்க வேண்டும். அதற்கு சிறப்பாக உதவும் இந்த புரோட்டின் ஹேர் பேக். இவை கூந்தலின் வளர்ச்சியை சீராக்கும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் அதை சரிசெய்து முடிக்கு போதிய வலுகொடுக்கும். அப்படி பயன்படுத்தகூடிய புரதம் நிறைந்த ஹேர் பேக் குறித்து பார்க்கலாமா?

​உளுத்தம்பருப்பு - புரதம் நிறைந்த ஹேர் பேக்

உளுந்து தோல் உளுந்து வெள்ளை உளுந்து என்று இரண்டு வகையிலும் பயன்படுத்துகிறோம். அதிக சத்து நிறைந்த இந்த உளுந்து பெரும்பாலும் அழகு பராமரிப்பில் பயன்படுத்துவதில்லை. புரதம் நிறைந்திருக்கும் இந்த உளுந்து உடலுக்கு தரும் எண்ணற்ற சத்துகளை போலவே கூந்தலுக்கும் தருகிறது.

தோல் நீக்காத உளுந்தை இலேசாக வறுத்து மிக்ஸியில் பொடித்து முகத்துக்கு ஸ்க்ரப் போன்று, ஃபேஸ் பேக் போட பயன்படுத்தலாம். வெந்தயம் போன்று இவையும் வழவழப்பு தரக்கூடியது என்பதால் முகம் பொலிவாக பளிச் என்று இருக்கும். முன்பு அழகின் மீது ஆர்வம் கொண்டிருந்தவர்கள் உளுந்தையும் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவை - உளுந்தம்பருப்பு -3 டீஸ்பூன்.

தோல் நீக்கிய அல்லது வெள்ளை பருப்பும் பயன்படுத்தலாம்.
​வெந்தயம் - புரதம் நிறைந்த ஹேர் பேக்

முடி கொட்டும் பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிப்பதில் வெந்தயம் வெகு சிறப்பாகவே உதவுகிறது. முடி உதிர்வு முதல் வழுக்கை வரையான அனைத்து பிரச்சனைக்கும் வெந்தயம் உதவுகிறது.

உடல் ஆரோக்கியம் போன்றே கூந்தலுக்கும் சருமத்துக்கும் நிறைவான ஆரோக்கியம் தருகிறது. வெந்தயத்தை பொடி செய்தும் பயன்படுத்தலாம். அப்படியே ஊறவைத்து அரைத்தும் பயன்படுத்தலாம். வெந்தய ஷாம்புவை வீட்டிலேயே தயாரிக்கும் முறை குறித்தும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அந்த லிங்கை இங்கு இணைக்கிறேன்.

வெந்தய ஷாம்பு யூஸ் பண்ணா முடி அடர்த்தி குறையாம நீளமா வளருமாம்..

வெந்தய இளநரையையும் குறைக்க உதவுவதால் இவை பெரும்பாலும் பலருக்கும் பிடித்த பராமரிப்பு முறையாகவே இருக்கிறது என்று சொல்லலாம். ஒரே ஒரு குறை என்றால் வெந்தயத்தை சைனஸ் அல்லது அதிக குளுமை இருப்பவர்கள் அதிகம் பயன்படுத்த கூடாது. அதிக நேரம் பயன்படுத்தவும் கூடாது என்பதே.
​கறிவேப்பிலை - புரதம் நிறைந்த ஹேர் பேக்

கறிவேப்பிலை கூந்தலின் கருமைக்கு உதவும் சிறந்த பொருள். தினமும் காலை வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையை மென்று தின்றால் அவ்வளவு அற்புதங்களை உடல் பெற்றுவிடும். அதோடு கூந்தலின் கருமை நிறமும் அதிகரிக்கும். இளநரை பிரச்சனை இருக்காது. கறிவேப்பிலையை அப்படியே அரைத்து விழுதாக்கி தலையில் ஹேர் பேக் போடலாம். கூந்தல் தைலம் காய்ச்சும் போது கறிவேப்பிலையும் மிக மிக அவசியமானது. இவை இல்லாமல் தைலம் தயாரித்தாலும் அவை சிறக்காது. நறுமணம் தரும் கறிவேப்பிலை எண்ணெய் இளநரைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
​தயாரிக்கும் முறை - புரதம் நிறைந்த ஹேர் பேக்

உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை மூன்றையும் தனித்தனியாக சிறிதளவு நீரில் மூழ்க வைக்கவும். மறுநாள் காலை முதலில் உளுந்தை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி, பிறகு வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் சுற்றி அதன் பிறகு கறிவேப்பிலையை சேர்த்து மைய அரைக்கவும். இந்த விழுது எல்லாமே குளிர்ச்சி நிறைந்தது என்பதால் தேவையெனில் இதில் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் அளவு சேர்க்கலாம். இவை கூடுதலாக கூந்தலில் இருக்கும் பொடுகையும் நீக்கவல்லது.

இதை நன்றாக கலந்ததும் பிறகு கூந்தலின் ஸ்கால்ப் பகுதி முதல் வேர்ப்பகுதி வரை நன்றாக தடவி விடவும். மண்டை முதல் நுனி வரை இதை தடவினால் போதும். பிறகு சுத்தமான டவலை வெந்நீரில் பிழிந்து தலையில் இறுக கட்டிகொள்ளவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலசவும். ஷாம்பு கொண்டு தேய்க்க வேண்டாம். சாதம் வடித்த கஞ்சியை மட்டும் கொண்டு அலசலாம்.
​குறிப்பு - புரதம் நிறைந்த ஹேர் பேக்

முதல் முறை இந்த பேக் பயன்படுத்தும் போது அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம். மாலை நேரங்களில் இதை பயன்படுத்தினால் குளுமை தரக்கூடும் என்பதால் காலை வேளையில் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பயன்படுத்த கூடாது. மாதம் ஒருமுறை அல்லது அதிகம் இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தகூடாது.

முடிக்கு தேன் பயன்படுத்தினா முடி சீக்கிரம் வெள்ளை ஆகுமா? இல்ல வளருமா!

சைனஸ், தலைவலி பிரச்சனை இருப்பவர்களும் காய்ச்சல் காலத்திலும் இதை பயன்படுத்தகூடாது. அதிக குளுமை தரக்கூடியது என்பதால் இதை பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிச்சயம் பலன் பெருமளவு இருக்கும். வளரும் பிள்ளைகளுக்கும் பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் இதை பயன்படுத்த தொடங்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News