Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 1, 2020

கரோனா ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்: பெற்றோர் சங்கம்


பள்ளிகளை திறப்பது குறித்து ஜூலை மாதத்தில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் சங்கம் சார்பில், கரோனா முற்றிலும் ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று change.org என்ற இணையதளம் மூலம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று முற்றிலும் ஒழியும் வரை அல்லது, கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, பள்ளிகளை திறப்பது என்பது மிக மோசமான திட்டம் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பது என்பது நெருப்புடன் விளையாடுவது போன்றது, அதனை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம் என்று அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கு மாறாக ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கோரிக்கை மனுவில், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது சிறப்பாக இருக்கும்பட்சத்தில், வரும் கல்வியாண்டை அப்படியே தொடர்வதில் என்ன சிக்கல்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த மனுவில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சுமார் 2.57 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

No comments:

Post a Comment