நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு ?


நீட் தேர்வு எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவு , வெறும் கனவுகளாகவே போய் விடுகிறது.

எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக, தமிழக அரசின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு பலமுறை கூடி விவாதித்தது. இந்த நிலையில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கலையரசன் குழுவினர் இன்று தாக்கல் செய்தனர்.

இதையடுத்து நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories