Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 17, 2020

Plus Two - மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தினை மாணவர்களிடமிருந்து பெறுதல் குறித்த தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரையினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயின்று 24.03.2020 அன்று நடைபெற்ற வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் பாடங்களுக்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை எழுதாத மாணவர்களிடம் இருந்து தற்போது வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் பாடங்களுக்கான மறுதேர்வு எழுதுவதற்கான விருப்பக்கடிதத்தினை ( Willing Letter ) 24.06.2020 தேதிக்குள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் . அக்கடிதத்தில் மாணவரது பெயர் , தேர்வெண் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படும் விருப்பக் கடிதங்களை தேர்வெண் வாரியாக அடுக்கி 26.06.2020 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News