Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 30, 2020

Tiktok, Shareit, UC Browser, Helo உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசு மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News