Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 6, 2020

10, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அரசு புதிய உத்தரவு


சென்னை: 10, 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வருகை தரவில்லை எனில் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1ல் ஒரு பாடத்துக்கான தேர்வும், ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட பாடங்களில், காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்ததில், 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவின்படி, 20 சதவீத மதிப்பெண்களும் இணைக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும், ரத்தான பாடங்களில், மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதால், அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகவே கருதப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், 10, 11ம் வகுப்பு மாணவர்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வருகை தரவில்லை எனில், ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என்று தற்போது தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

4 comments:

  1. ஒரு குழந்தை காலாண்டு தேர்வுக்கு உடல் நிலை சரியில்லாமல் வர இயலவில்லை பின்னர் அக்டோபர் மாதத்தில் இருந்து பள்ளி இறுதி நாள் வரை வந்துள்ளாள் அவளுக்கு எப்படி ஆப்ஷன்ஸ் போட முடியும் ஆகவே தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி என்று சொல்லி விடலாம்

    ReplyDelete
  2. உடல்நிலை சரியில்லாமல் ஊதோ ஒரு தேர்வுக்கு வராவிட்டால் கூட ஆப்சென்டா??

    ReplyDelete