Join THAMIZHKADAL WhatsApp Groups

கிழக்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், கொரோனா தோய் பரவலின் காரணமாக அதற்கான விண்ணப்ப பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் விண்ணப்பிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1075 பணிகள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கிழக்கு இரயில்வேத் துறை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 1075
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
எலக்ட்ரானிக் மெக்கானிக் - 75
Blacksmith - 09
Mechanic Maintenance - 09
எலக்ட்ரீஷியன் - 593
மெக்கானிக் - 54
வையர்மேன் - 67
லைன் மேன் - 49
பெயிண்டர் - 26
கார்ப்பெண்டர் - 09
மெசினிஸ்ட் - 63
கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் மாறுபட்ட கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://139.99.53.236:8080/rrcer/Notification%20-%20Act%20Apprentice%202019-20.pdf
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://apprentice.rrcrecruit.co.in/gen_instructions_er.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.07.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrcer.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment