Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 23, 2020

"10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்டில் வெளியீடு'



பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: பவானியில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்காக புதிதாகக் கட்டப்படும் பள்ளிகளில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோர்களிடம் கரோனா காலத்துக்குப் பிறகு கருத்துக்கேட்பு நடைபெறும். அதன்பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும். 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களுக்கு ஜூலை மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும்.

பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும் அல்லது இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 27-ஆம் தேதியன்று விடுபட்ட தேர்வுகளை எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் மதிப்பெண்கள் பட்டியல் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றார்.

No comments:

Post a Comment