Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 31, 2020

11ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களும் 12ஆம் வகுப்பு செல்லலாம்: அமைச்சர் செங்கோட்டையன்



தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது என்பதையும் இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் கோவை முதலிடத்தையும், விருதுநகர் மாவட்டம் 2-ம் இடத்தையும்
கரூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது

இந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்களும் 12ஆம் வகுப்பு செல்லலாம் என்றும், 12ஆம் வகுப்பு படித்து கொண்டே 11ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடங்களை எழுதலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதனால் 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்கள் மீண்டும் 11ஆம் வகுப்பிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும், கல்லூரிகளில் அரியர் போல் 12ஆம் வகுப்பு படித்து கொண்டே 11ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடங்களை படித்து தேர்வு எழுதலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment