Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 16, 2020

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை திடீரென வெளியிட காரணம் என்ன? அமைச்சர் செங்கோட்டையன் பதில்


தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் தமிழ்நாடு பாடத்தில் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 7,79,931 பேர் எழுதினர். அதில், மாணவிகள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் தேர்வு எழுதினர்.

கொரோனா வைரஸ் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் தேர்வு எழுதியவர்களில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்வு எழுதியவர்களில் மாணவியர் 94.80 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 89.41 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவர்களைவிட மாணவிகள் 5.39 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். கணிதப் பாடப்பிரிவில் அதிகபட்சமாக 96.31 சதவீதம் பேரும், உயிரியல் பாடப் பிரிவில் 96.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி முன்னரே அறிவிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

இந்தநிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எதிர்பாரதவிதமாக வெளியிட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'தேர்வு முடிவு வெளியிட்டது நல்லதா , கெட்டதா என பதில் கேள்வி எழுப்பிவிட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment