Join THAMIZHKADAL WhatsApp Groups

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனம் அதனை பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஐசிஎம்ஆர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கொரோனா தடுப்பு மருந்து சோதனையை துரிதப்படுத்த ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. சோதனை வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment