Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 17, 2020

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி முதல் தேர்வு துவக்கம்; அனைத்து பாடத்தையும் எழுதலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி



சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் தேர்வு துவங்குகிறது. இதில் அனைத்து பாட தேர்வுகளையும் எழுதிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது,’’ என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று(நேற்று)வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்தே உடனடியாக பிளஸ் 2 தேர்வு முடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதாத மாணவர்கள் வருகின்ற 27ம் தேதி முதல் துவங்கும் தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம்.

எத்தனை மையங்கள் தேவை என்றாலும் அத்தனை மையங்கள் ஒதுக்கப்படும். தேர்வு முடிந்ததும் உடனடியாக விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். எனவே தேர்வு எழுதாத மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழகம் முழுவதும் 34,842 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதில் சில மாணவர்கள் 5 பாடங்களையும் எழுதவில்லை. ஒரு சிலர் நான்கு பாடங்களை எழுதவில்லை. 123 மாணவர்கள் மட்டும் 1 பாடத்தை எழுதவில்லை. ஆனாலும் தேர்வு எழுதாத மாணவர்கள் 27ம் தேதி முதல் துவங்கும் தேர்வின்போது, அனைத்து பாடத் தேர்வுகளையும் மீண்டும் எழுதிக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment