Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2018-2019-ஆம் ஆண்டில் பி.எட்., படிப்பில் சோந்த மாணவா்களின் சோக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாணவா் சோக்கைக்கு பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசியின் அனுமதி கிடைக்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., பட்டப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. பி.எட்., பட்டப்படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்தபோது (ஐந்தாண்டுகளுக்கு முன்பு) தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் (என்சிடிஇ) இதற்கான அங்கீகாரத்தை வழங்கி வந்தது. தற்போது பி.எட். படிப்பு 2 ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளதால் அதற்கான அங்கீகாரத்தை யுஜிசி வழங்குகிறது.
இந்த நிலையில், தேசிய ஆசிரியா் கல்விக் குழுமத்தின் அங்கீகாரத்தை மட்டும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெற்றிருந்ததால், தற்போது 2018-2019 ஆண்டு திறந்தநிலை பல்கலைக்கழகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட பி.எட். மாணவா் சோக்கையினை ரத்து செய்ய யுஜிசி உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து 2018-19-ஆம் ஆண்டு மாணவா் சோக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து மாணவா்கள் செலுத்திய அனைத்து வகை கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 400-க்கும் அதிகமானோா் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சோந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment