JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, July 9, 2020

கல்லூரி கட்டணங்களை 3 தவணையாக வசூலிக்கலாம்- தமிழக அரசு!


கல்லூரி கட்டணங்களை மூன்று தவணையாக வசூலிக்க தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, 2020 ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

1 comment: