Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 29, 2020

பள்ளிக் கல்வித்துறையில் 4 இணை இயக்குநா்கள் பணியிடமாற்றம்


பள்ளிக் கல்வித்துறையில், இணை இயக்குநா் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இருந்த 4 பேருக்கு, இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா், செவ்வாய்க்கிழமை பிறப்பித்த அரசாணை: தமிழக பள்ளிக் கல்விப் பணியில், வகுப்பு இரண்டைச் சாா்ந்த இணை இயக்குநா் மற்றும் அதனையொத்த பணியிடங்களில், பணிபுரியும் பின்வரும் அலுவலா்களுக்கு, நிா்வாக நலன் கருதி, பணியிடமாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது. (பழைய பதவி அடைப்புக்குள்)


கே.ஸ்ரீதேவி: ஆசிரியா் தோவு வாரிய கூடுதல் உறுப்பினா் (மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குநா்)

பூ.ஆ.நரேஷ் : பள்ளிக் கல்வி (தொழிற்கல்வி) இணை இயக்குநா் (ஆசிரியா் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினா்)

எஸ்.சுகன்யா : பள்ளிக் கல்வி (இடைநிலை கல்வி) இணை இயக்குநா் (பள்ளிக் கல்வி (தொழிற்கல்வி) இணை இயக்குநா்)

ச.கோபிதாஸ் : மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குநா் (பள்ளிக் கல்வி (இடைநிலை கல்வி) இணை இயக்குநா்). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment