Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

ஆக.5ல் ஆசிரியர்கள் போராட்டம்


சென்னை: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மயில், அகில இந்திய செயலாளர் கே.பி.ஓ.சுரேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

2019ல் நடந்த ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 6,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு, குற்றவியல் நடவடிக்கை, 17பி நடவடிக்கை, ஆகியவற்றை மேற்கொண்டது. அவற்றை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

பொதுத்தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் செயலாளர் மீதும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் செயலாளர் மீதும் 17பிநோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இதை திரும்பப் பெற வேண்டும். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால்1.50 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சுழற்சிமுறையில் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 8ம் தேதி சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக டிவி மூலம் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் தெரியவில்லை.

No comments:

Post a Comment