Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 5, 2020

முதியோர், விதவைகள் ஓய்வூதியம் உள்ளிட்ட 8 திட்டங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவைகள் ஓய்வூதிய திட்டம் உட்பட 8 ஓய்வூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக மட்டுமே பெற வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தில் வருவாய்த் துறை சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவைகள் ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட விதவைகள் ஓய்வூதிய திட்டம், கணவரை இழந்த பெண்கள் ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத பெண்கள் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம்,
இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் ஆகிய 8 ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வருவாய்த் துறையினரால் நேரடியாக பெறப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஓய்வூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மாற்றுவதற்கான வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு மின்னாளுமை முகமையை மாநில வருவாய்த் துறை கேட்டுக் கொண்டது. அதன்படி, மேற்குறிப்பிட்ட 8 ஓய்வூதிய திட்டங்களுக்கும் ஆன்லைன் விண்ணப்பங்கள் உருவாக்கப்பட்டு அவை அந்தந்த மின்மாவட்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆன்லைன் விண்ணப்ப வசதியை, தொடர்ந்து பயன்படுத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு வருவாய்த் துறை உத்தரவிட்டது. இந்த பணிகளை தமிழ்நாடு மின்னாளுமை முகமை கண்காணித்து வந்தது.

இந்நிலையில், ஜூலை 2-ம் தேதிவருவாய் நிர்வாக ஆணையருக்கு மாநில மின்னாளுமை முகமை ஆணையர் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் ஆன்லைன் விண்ணப்ப வசதியை ஒருசில மாவட்டங்கள் மட்டுமே செயல்படுத்தி வருவதாகவும் மற்ற அனைத்து மாவட்டங்களும் இவ்வசதியை நடைமுறைப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்துமாறும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, அனைத்துமாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 8 ஓய்வூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களை நேரில் பெற வேண்டாம் என்றும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News