Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 2, 2020

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலை 9000 காலியிடங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகின்றன.

பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக, மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் ஐ.பி.பி.எஸ். எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection-IBPS) நடத்தும் பொதுத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு கிராமிய வங்கிகள் உள்பட 43 பொதுத்துறை வங்கிகளில் 2020-ஆம் நிதி ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்ப அதிகாரி, வேளாண் விரிவாக்க அதிகாரி, சட்ட அலுவலர், மனிதவள மேம்பாட்டு அதிகாரி, விற்பனை அலுவலர் 9000-க்கும் அதிகமான "குரூப் ஏ மற்றும் குரூப் பி" காலிப்பணியிடங்கள் ஐ.பி.பி.எஸ் அமைப்பின் பொதுத்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

நிறுவனம்: Institute of Banking Personnel Selection(IBPS)

பணிகள்: Officers (Scale - I, II, III) & Office Assistant (Multi-Purpose)

மொத்த காலியிடங்கள்: 9000+

பணியிடங்கள்: இந்தியா முழுவதும்.

தகுதி: அனைத்து துறையைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். முடித்தவர்கள், எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எம்.சி.ஏ. பட்டதாரிகளும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : Officer Scale- I (Assistant Manager) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 30 வயதிற்குள்ளும், Officer Scale- II (Manager) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 32 வயதிற்குள்ளும், Officer Scale- III (Senior Manager) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 40 வயதிற்குள்ளும், Office Assistant (Multipurpose) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 - 28 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி ஒரு சில பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவரப்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: Officer (Scale I, II & III) பணியிடங்களுக்கு SC/ST/PWBD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ. 175, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்த அட்டைகள் மற்றும் நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை நகல் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/AdvtCRPRRB_IX.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2020

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News