Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 21, 2020

மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்!!!



சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்க்கலாம்.

சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதேசமயம் குடல் ஆரோக்கியம் வலுபெறும்.

அரிசி சோறு வாதம் , பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியது.

சோறில் அமினோ ஆசிட் இருப்பதால் தசை பிடிப்புகளும் இருக்காது. இந்த அமினோ ஆசிட் சரும நிறத்தை கூட்டி பொலிவு தரும். சருமத்தின் நச்சு நீக்கியாகவும் செயல்படும். தலைமுடி கருமைக்கும் நல்லது.

அதேபோல் அரசியை சமைக்கும் முன் ஊற வைத்து சமைத்தால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின் B1 மற்றும் B3 இதயத்திற்கு நல்லது. அதில் உள்ள ஸ்டார்ச் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து , புற்றுநோய்க் கிருமிகளையும் அழிக்க உதவும். எனவே மூன்று வேளையும் சோறு, அதற்கு சமமான காய்கறிகள், கீரை வகைகளையும் உணவோடு சேர்த்துக்கொள்வது நோயற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

No comments:

Post a Comment