Join THAMIZHKADAL WhatsApp Groups
கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதன்படி நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம்? என்பது குறித்த ஏற்கனவே வெளியிட்ட அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை, இடங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றை ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், 2-ம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு என்பது செப்டம்பர் 10-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பொறியியல் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 16-ம் தேதி தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், இன்னும் ஒருவாரத்தில் அதுதொடர்பாக ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment