Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 20, 2020

பாமாயில் உடலுக்கு நல்லதா?.


இன்றைய உலகில் பாமர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எண்ணெய் பாமாயில் ஆகத்தான் இருக்கின்றது. உண்மையில் இந்த பாமாயில் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதல் விளைவிக்கின்றதா? அல்லது நல்லதா? என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். பல ரிவி விளம்பரங்களில் ரீபைண்டு ஆயில் விளம்பரங்கள் மக்களை பெரிதளவில் கவர்ந்து வருகின்றது. உண்மையில் பாமாயில் எண்ணெய் உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்க கூடியது அல்ல. பாமாயில் என்பது ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான்.

இந்த தாவரம் இந்தோனிசியா, மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் விளைகிறது. மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்படாத எண்ணெய்யை வாங்கி இங்குள்ளவர்கள் சமயலுக்கு பயன்படுத்தும் தரத்திற்கு மாற்றி விடுகிறார்கள். பாமாயில் பயன்பாடு என்பது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் உள்ளது. எகிப்து மக்கள் அப்போதே பாமயிலை பயன்படுத்தி உள்ளதற்கு ஆதரங்கள் உள்ளன.

பாமாயில் ஒரு வகையான பழத்தின் கொட்டையிலிருந்தும் அதன் சதையிலிருந்தும் பெறப்படுகிறது. சுத்தமான பாமாயில் சிகப்பு நிறத்தில் இருக்கும். 15 கிலோ பழத்திலிருந்து 20 முதல் 25 சதவிகிதம் பாமாயில் கிடைக்கும். வெறும் 100 கிராம் பாமாயில் எண்ணையில் 884 கலோரிகள் உள்ளதாக மதிப்பிட்டுகிறார்கள்.

இதில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. குறிப்பாக வேறு எந்த பழத்திலும் கிடைக்காத அளவு வைட்டமின் ஈ இந்த பழத்தில் உள்ளது. பொதுவாக ரீபைண்டு செய்யப்படாத ஆயிலில் வைட்டமின் ஈ அதிக அளவில் இருக்கும். 

எனவே பாமாயிலை பொறுத்த வரை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தால் உடலுக்கு நல்லது.

No comments:

Post a Comment