Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 20, 2020

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கான மதிப்பெண்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாமா? அல்லது கிரேடு முறை அளிக்கலாமா? என்பது குறித்தும், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இன்று மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment