Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 28, 2020

இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை அதிகமா சேர்க்காதீங்க!


தமிழகத்தில் சென்னையில் மட்டும் அதிகரித்து வந்த கொரோனா சமீப நாட்களில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவி வருகிறது. எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்கிற பயத்தில் மக்கள் அதிகளவில் இஞ்சியையும், எலுமிச்சை, மஞ்சள் தூளையும் சேர்த்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சீரகம், இஞ்சி, மஞ்சள், சுக்கு, எலுமிச்சை போன்றவைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது தான் என்றாலும், இவற்றுக்கு எல்லாம் ஒரு அளவு இருக்கிறது. பக்க விளைவுகளற்ற, அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவல்ல ஆற்றலும் இவைகளுக்கு உண்டு என்றாலும் அளவுக்கு அதிகமாக இவற்றை உட்கொள்வதால் வயிற்றுப் பிரச்னைகள் வரும். தோல் பிரச்னைகளும் உண்டாகலாம். இவற்றை தினமும் ஏதாவது ஒன்று என்ற அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.


பாலில் மஞ்சளும், பனங்கற்கண்டும் சேர்த்து தினசரிக் குடிப்பவர்கள் மஞ்சளின் அளவை குறைத்து சிட்டிகைக் கணக்கில் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறையும் ஒருநாளைக்கு ஒன்று அல்லது 2 தடவைகளுக்கு மேல் குடிக்கக் கூடாது. அதிகமாக குடிப்பதால் இரப்பை பிரச்னை, அமிலப் பிரச்னை உருவாகலாம்.

அதே போல் அளவுக்கு அதிகமாக இஞ்சியைப் பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல், நெஞ்சு குடைச்சல் வயிற்றுப் பிரச்னைகள், வயிற்றுப்போக்கும் சில நேரங்களில் உண்டாகலாம்.

1 comment:

  1. you people will not give solution but criticize for having natural remedies, all pro pharma companies

    ReplyDelete