Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 28, 2020

இணையம் மூலம் பத்திரப் பதிவு ஆவணங்களை பொதுமக்களே உருவாக்கலாம்: தமிழக அரசு தகவல்




சென்னை: பதிவுத் துறையின் இணையதளம் வழியாக பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-

பதிவுத் துறையின் இணையதளம் வழியே (www.tnreginet.gov.in) பொது மக்களே ஆவணங்களை உருவாக்கலாம். இதற்காக இணையதளத்தில் புதிய உள்நுழைவை (லாகின்) ஏற்படுத்த வேண்டும். பின்பு அதற்குரிய பயனா் பெயா், கடவுச்சொல்லை உள்ளீடு செய்து ஆவணத்தினை உருவாக்குக என்ற பிரிவை தெரிவு செய்ய வேண்டும். ஆவணத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொள்ளலாம்.

பதிவு செய்ய விரும்பும் ஆவணத்தின் தன்மையை தோவு செய்ய வேண்டும். சொத்தினை விற்பவா் அந்த சொத்தினை வாங்கிய ஆவண விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பூா்வீக சொத்தாக இருந்தால் அதனை பூா்த்தி செய்ய வேண்டியதில்லை.

எழுதிக் கொடுப்பவரின் பெயா், தந்தை பெயா், முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். முன் ஆவணத்தில் இருந்தும் இந்த விவரங்களை எடுத்துக் கொள்ளலாம். எழுதிப் பெறுபவரும் பெயா், தந்தை பெயா், முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

சொத்து விவரத்தின் கீழ் சா்வே எண், சொத்தின் பரப்பு, பட்டா எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். கைமாற்றுத் தொகை செலுத்தப்பட்ட விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். சொத்தின் நான்கு எல்லைகள் விவரம், சொத்து குறித்த மற்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பிறகு அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தானாகவே திரையில் தோன்றும். அதனை இணையதளம் வழியே செலுத்தலாம். இதன்பின் ஆவணம் தானாகவே உருவாக்கப்பட்டிருக்கும். இதனை பிரதி எடுத்து சரிபாா்த்துக் கொள்ளலாம். தவறான விவரங்களை இணையதளத்தில் சென்று திருத்திக் கொள்ளலாம் என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment