
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்துக்கு வசதி செய்துதரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் சூழல் காரணமாக, 10, 11 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வுகளை ஜூலை மாதம் 27ஆம் தேதியில் நடத்தவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துக்கு வசதி செய்து தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது எனவும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து வரும் தேர்வர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.



No comments:
Post a Comment