Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 7, 2020

பலவகை நோயிலிருந்து காக்கும் திரிபலா!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தலை முடியில் ஆரம்பித்து, சுவாசம், சருமம், இதயம், செரிமானம், இரத்த பாதிப்புகள், சிறுநீரக, மூட்டு வலிகள் என்று பல்வேறு வியாதிகளின் பாதிப்புகளில் அல்லல் பட்டு வருகிறது, இன்றைய தலைமுறை!
மனச் சோர்வு கொள்ள வைக்கும் அலுவல் மற்றும் வாழ்க்கை முறை, ஒய்வுகளுக்கு முழு இடம் கொடுக்காமல், எப்போதும், இணைய இணைப்பில், மொபைல் பயன்பாட்டில் இருப்பது என்று நிகழ்கால சந்தோசங்களே, வருங்கால துன்பங்களாக மாறி விடுகின்றன.

பல வியாதிகளை உண்டு பண்ணும் தற்கால வாழ்க்கை முறையில், ஒரே மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம், அனைத்து பாதிப்புகளையும் சரி செய்து, உடல் வளம் திரும்பப் பெற்று, மீண்டும் இளமைப் பொலிவுடன் வாழ முடியுமா? கேள்விகள், இதுபோல இன்னும் ஆயிரம் இருந்தாலும் சரி, அவற்றுக்கான பதில், ஒன்றே ஒன்றுதான்!. ஆம்!, இருக்கிறது!, நிச்சயம் முடியும்.

ஒரே மருந்தில், நீங்கள் கேட்கும் அனைத்தையும் பெற முடியும்!பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழங்கிய அரும்பெரும் மருந்து, மூப்பு வியாதிகள் அணுகாமல், உடல் வளத்தை காத்து சீராக்கும், இராஜ மருந்து! உடலை வியாதிகளில் இருந்து காத்து, வலுவாக்கும் தன்மை மிக்க, காய கற்ப மருந்துகளில், உயர்வாக கூறப்படுவது! அதுவே, திரிபலா எனும் முக்கூட்டு மருந்து!

திரிபலா!

“மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது” என்பார்கள், பெயர் சிறிதாக இருந்தாலும், திரிபலாவின் பலன்கள் சொல்லில் அடங்காதது!
சித்த வைத்திய முறைகளில், அனைத்து மருந்துகளிலும் முதன்மையானதும், எல்லா மருந்துகளிலும் சேர்க்கப்படும் பெருமை மிக்கதும்
திரிபலா என வட மொழி பெயர் கொண்டு விளங்கும் இந்த காய கற்ப மருந்து, மூன்று அதிசய மூலிகைகளின் கலவையாகும். மூப்பை தடுக்க அவ்வைக்கு கிடைத்த நெல்லிக்கனி, தான்றிக்காய் எனும் உடல் வெப்பம், கிருமி பாதிப்பு அகற்றும் மூலிகைக்காய் இவற்றுடன் “கடுக்காய் இருந்தால், பகைவன் வீட்டிலும் தைரியமாக உணவருந்தலாம்” எனும் சொல்லுக்கு ஆதாரமான சித்தர்களின் காய கற்ப மூலிகை கடுக்காய், இவை மூன்றும் சேர்ந்து உண்டான அற்புத கலவையே, திரிபலா எனும் கூட்டு மருந்தாகும்.

திரிபலா மனிதனுக்கு என்ன நன்மைகள் செய்யும்?

வியாதி எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் வியாதிகளின் பாதிப்புகளை விலக்கும் தன்மை மிக்கது. உடலின் வளர் சிதை மாற்றத்தில், முக்கிய பங்கு வகித்து, உடலில் செல்களின் உற்பத்தியைக் குறைத்து, செல்களின் இயக்கத்தை, சீராக்குகிறது.

சீரண கோளாறுகள் :

செரிமான பாதிப்புகள், குடல் இயக்கத்தை சீராக்கி, இரத்த கொழுப்புகளை கரைக்கும் கல்லீரல் சுரப்பை அதிகரித்து, உடலின் கார அமில நிலையை சீராக பராமரிப்பதில் பேருதவி புரிகிறது.

வயிற்றுப் பூச்சிகளை விரட்டும் :

வயிற்றின் விஷ பாதிப்புகளை நீக்கி, மலச்சிக்கல் கோளாறுகளை போக்கும் சிறந்த மலமிளக்கியாக செயலாற்றும், வயிற்றில் உண்டாகும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை வெளியேற்றி, மீண்டும் அந்த பாதிப்புகள் வயிற்றில் ஏற்படாதவாறு, குடலில் நச்சு தடுப்பு அமைப்பை உண்டாக்கி, உடல் நலம் காக்கிறது, திரிபலா.

ரத்த சோகையை குணப்படுத்தும் :

ஹீமோ குளோபின் எனும் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து, இரத்த சோகை பாதிப்புகளை களையும் ஆற்றல் மிக்கது, கணைய இயக்கத்தை சரியாக்கி, இன்சுலின் சுரப்பு மூலம், உடலில் சர்க்கரை சம நிலையை உண்டாக்கி, சர்க்கரை பாதிப்புகளை நீக்கக் கூடியது, திரிபலா.

உடல் பருமனை குறைக்கும் :

உடல் கொழுப்பை உண்டாக்கும் செல்களை அழித்து, உடல் பருமனைக் குறைத்து, உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது, திரிபலா.சுவாச பாதிப்புகளை சரியாக்கி, இரத்த நாள அடைப்புகளைப் போக்கி, இரத்தத்தை சுத்தம் செய்து, சரும பாதிப்புகளை நீக்கும், சைனஸ் கோளாறுகளை சரி செய்து, உடலில் சளித் தொல்லைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது.

ஒற்றைத் தலைவலி :

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளுக்கு சிறந்த தீர்வாகி, வலிகளை போக்குகிறது. சமீபத்திய ஆய்வுகள், புற்று வியாதியை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, வியாதியை போக்கும் வல்லமை, திரிபலாவுக்கு இருப்பதாகக் கூறுகின்றன.

வயிற்றுப் புண்கள் :

மேலை மருந்துகள் அதிகம் எடுத்து, பசியின்மை மற்றும் வயிற்றுப் புண்களால் சிரமப்படுவோர், தினமும் உணவு சாப்பிட்டபின், இரு வேளை, திரிபலாவை தேனில் கலந்தோ அல்லது வெறுமனோ, சாப்பிட்டு தண்ணீர் பருகி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கும்.

சரும வியாதிகள் :

அனைத்து பாதிப்புகளுக்கும் திரிபலாவை சூரணம் எனும் பொடியாகவே, தினமும் சாப்பிட்டு வரலாம். இரவில் திரிபலா பொடியை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் பருகி வர, மலச் சிக்கல் நீங்கும், நரையை போக்கும், சரும வியாதிகளை விலக்கும்.

சொட்டை தடுக்க :

தலைமுடி உதிர்வு மற்றும் சொட்டை எனப்படும் முடி அடர்த்தியாக கொட்டுதல் போன்ற பாதிப்புகளுக்கு, திரிபலா பொடியை சோற்றுக் கற்றாளை சதையுடன் கலந்து தலையில் தடவி ஊறவைத்து, தலையை அலசி வர, முடி உதிர்தல் நின்று, விரைவில் முடி அடர்த்தியாக வளரும். மேலும், திரிபலாவை ஊறவைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து முழுகி வந்தாலும், தலை முடி உதிர்தல் நிற்கும் என்கிறது, சித்த மருத்துவம்.

பல்வலி:

திரிபலாவை வெந்நீரில் கலந்து தினமும் வாய் கொப்புளித்து வர, பற்களில் ஏற்படும் பல் வலி, பல் சொத்தை போன்ற பாதிப்புகள், வாய் துர்நாற்றம் முதலியவை நீங்கும். திரிபலா நீரில் கழுவி வர, உடலில் உள்ள ஆறாத புண்களும் விரைவில் ஆறிவிடும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News