
சத்துணவு
தண்டுக்கீரையில் இரண்டு வகைகள் உள்ளன. தண்டு வெண்ணிறமாக உள்ள கீரையை வெங்கீரைத்தண்டு என்றும், செந்நிறகீரைத்தண்டு என்றும், செந்நிறமாக உள்ள கீரையை செங்கீரைத் தண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. செங்கீரைத்தண்டு, வெங்கீரைத்தண்டு ஆகிய இரண்டு வெவ்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டிருப்பதாக மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.
செங்கீரைத்தண்டு தீராத பித்த நோயைத் தீர்க்கிறது. இரத்தத்தில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் தண்டுக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
உணவை எப்படி முறையாக சாப்பிடுவது என்பதை மறந்துபோன காரணத்தால், வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது.
தண்டு கீரை குழம்பு, கூட்டு சாப்பிடுவதால் குடல் புண்கள் ஆற்றுகிறது. மலச்சிக்கல் இளக செய்து மலக்கட்டு பிரச்சனையையும் தீர்க்கிறது.
தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன.
இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தயமின், ரிபோஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், புரதம், தாது உப்புக்கள், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோாின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
இது இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, வயிற்று ரணம், உள் அழல், மூத்திர கிருச்சிர நோய்களைக் குணப்படுத்த வல்லது. கல்லீரல், நீர்த் தாரையில் அடைபட்ட கற்களை எாித்து விடும் தன்மையுள்ளது.
முதுகெழும்பை பலப்படுத்துகிறது. பசியைத் துாண்டக் கூடியது. எலும்பு மஜ்ஜை ( உள் மூளை ) வளர்க்கிறது. இரத்தத்தை சுத்திகாிக்கக் கூடியது. மலச்சிக்கலுக்கும் சிறந்தது.
குடல் புண்களை ஆற்றும், கட்டிகளைக் கரைக்கும், இருதய பலவீனத்தைப் போக்கும்.
மூச்சுக் குழல், குடல் போன்றவற்றில் ஏற்படும் தடைகளை நீக்கவும், பித்தத்ைத நீக்கும் சக்தி படைத்தது. மனிதனின் ஆக்ரோஷ குணத்தைப் படிப்படியாகக் குறைக்கவல்லது.
குடல் புண் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலாகவோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. அாிசி கழுவிய நீாில் இதன் தண்டைச் சேர்த்து புளி விட்டு மண்டியாகச் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாகும்.
இது உடல் பலத்தையும், அழகையும், ஒளியையும் கொடுக்கும், மூல நோயைக்கு மிகவும் சிறந்தது.
பெண்களின் பெரும்பாட்டையும், உடல் வெப்பத்தையும் குணப்படுத்துகிறது.
கருப்பை கோளாறுகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது. வெங்கீரைத்தண்டு சிறுநீர் பிரச்சிைனகளைத் தீர்க்கிறது.
பித்தத்தை அகற்றுகிறது. உடல் வெப்பத்தைத் அதோடு, மேகம், வயிற்றுக்கடுப்பு, மூலம், இரத்த பேதி ஆகியவற்றையும் வெங்கீரைத்தண்டு குணப்படுத்துகிறது.
கொழுப்பைக்கரைக்கவும், தேைவயற்ற சதையைக் குறைக்கவும், அதிக உடல் நீரை வெளியேற்றவும் தண்டுக்கீரை பயன்படுகிறது.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் தண்டுக்கீரையை அதிக அளவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
உணவிலுள்ள எல்லாவித சத்தையும் இது தரக்கூடியது. ஆகையால் இதை முழுச்சத்துணவாகக் கொள்ளலாம்.
சீரான உடல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத கீரையாகும். எனவே நமது மூலிகை வளங்களை நன்கு பயன் படுத்தி ஆங்கில மருந்துகளை அரவே தவிர்த்து, உணவே மருந்தாக உண்டு என்றென்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்...!
நோய் வரும் முன் காக்காப்பது சிறப்பு வந்த பின் பாக்கலாம் என்றால் அது மருத்துவருக்கு சிறப்பு...
எனவே "உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையிலே" அன்புடன் உங்கள் சங்கரமூர்த்தி.. 7373141119



No comments:
Post a Comment