Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 2, 2020

பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை



10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முன்னும் பின்னும் அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அப்போது ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். அது தொடர்பாக ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 17 (b) பிரிவின் கீழ் அவர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ஆசிரியர்கள் ஊடகங்களுக்கு தனது அனுமதி இல்லாமல் பேட்டி அளிக்கக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பாக ஆசிரியர்கள் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தற்போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்தது தொடர்பாக ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment