Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 2, 2020

ரேஷன் கடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் வினியோகம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


ரேஷன் கடை பணியாளர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள், வினியோகிக்கப்பட்டன. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, காஞ்சிபுரம், திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு சங்க அலுவலகத்தில், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், மலை ஜாதியினர் ஆதரவற்ற விதவைகள் மாற்றுத்திறனாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு, வயது வரம்பு கிடையாது. விற்பனையாளர் பணிக்கு, பிளஸ் -2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுனர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமோ இம்மாதம், 24ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும் என, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ஏராளமான ஆண், பெண் நீண்ட வரிசையில் காத்திருந்து, விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். சிலர் அங்கேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News