Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 15, 2020

டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும்போது இணைக்க வேண்டிய கருத்துருக்கள்!



2020 ம் ஆண்டுக்கான டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா 05.09.2020 அன்று ஆசிரியர் தின விழாவாக நடைபெற உள்ளது. எனவே , திண்டுக்கல் மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை நலத்துறையின் அனைத்துவகை பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு மாநில நல்லாசிரியர் விருதிற்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. எனவே , விருது பெறத் தகுதியான ஆசிரியர்களை இனம் கண்டு விருது பெறுவதற்காக தகுதியான ஆசிரியர்களின் கருத்துரு 20.07.2020 க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு திண்டுக்கல் மாவட்டம் , அனைத்துவகைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விருது பெறத் தகுதியான ஆசிரியர்களின் கருத்துரு அனுப்பிவைக்கும் பொழுது சம்மந்தப்பட்ட ' வட்டாரக்கல்வி அலுவலர் பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வர் கீழ்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1. முகப்பு கடிதத்தில் ஆசிரியரின் வீட்டு முகவரி ( மின்னஞ்சல் குறியீட்டுடன் ) மற்றும் கைப்பேசி எண் குறிப்பிட வேண்டும்.

2. இரண்டு கருத்துரு அனுப்பிடல் வேண்டும்.

3. கருத்துரு சாதாரண புத்தக வடிவில் இருத்தல் வேண்டும்.

4 . இரண்டு கருத்துருக்களுடன் சம்மந்தப்பட்ட ஆசிரியரின் அசல் பணிப்பதிவேடு இணத்தனுப்பிடல் வேண்டும்.

5 . இணைப்பில் கண்டுள்ள படிவம் பூர்த்தி செய்து ( வானவில் அவ்வையார் தமிழ் ப்பான்டில் ( Vanavil Avvaiyar ) ல் Excel format ல் மட்டுமே தட்டச்சு செய்ய வேண்டும் ) rewritable CD ல் copy செய்து கருத்துருவுடன் இணைத்தனுப்ப வேண்டும்.

6. ஆசிரியர் திரு . / திருமதி . / செல்வி . / சகோதரி சகோதரன் . என்பாரின் கல்வி , பணிக்காலத்திற்கான பதிவுகள் சரியாக உள்ளது என்றும் , இவ்வாசிரியர் மீது எவ்விதழான சட்டரீதியான குற்றச்சாட்டுகள் , விசாரணைகஞ் கஈ ஏடத்தைதுவையில் இல்லை ரீதியாகவோ அல்லது வேறு எந்த முறையிலும் குற்றச்சாட்டுகள் ஏதும் எனவும் சார்ந்த ஆசிரியர் முதல் முடிய இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் என்கிற சான்று இணைத்தனுப்ப வேண்டும்.

7. நேர்காணலுக்கு அழைக்கும் பொழுது சம்மந்தப்பட்ட ஆசிரியர் ஆளரிச் சான்று மற்றும் இரண்டு passport size போட்டாவுடன் வருகை புரிந்திட வேண்டும்.

No comments:

Post a Comment