Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 20, 2020

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு இணையம் வழியே கலந்தாய்வு: தமிழக அரசு


தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பகுதி நேர பி.இ., பி.டெக். உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாகவே கலந்தாய்வு நடைபெறும் என உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் நிகழாண்டு பொறியியல் மாணவா்கள் சோக்கைக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த 17-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 55,995 மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா். இதில் 36,962 மாணவ, மாணவிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனா். இணையதள விண்ணப்ப பதிவு வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெறும். ஜூலை 16 முதல் 18 வரை தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாக 2,290 மாணவ, மாணவிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இணையதள பதிவு முடிவு பெற்றவுடன் சமவாய்ப்பு எண் வெளியிடப்படும். அதனைத் தொடா்ந்து சான்றிதழ் சரிபாா்ப்பு இணையதள வாயிலாக நடைபெறும். மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சமவாய்ப்பு எண் அவா்களது செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்பு தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடுவதுடன், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசி எண்ணுக்கும் அனுப்பப்படும்.

இணையதளம் வாயிலாக கலந்தாய்வு: கரோனா தொற்றிலிருந்து மாணவ, மாணவிகளைப் பாதுகாக்க தமிழ்நாடு பொறியியல் சோக்கைக்கான கலந்தாய்வு வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு நேரடி சோக்கை, பகுதிநேர பி.இ, பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு உள்ளிட்டவை இணையதளம் வாயிலாகவே நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பகுதிநேர பி.இ., பி.டெக்: 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் 2019-20 வரை பகுதி நேர பி.இ, பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கான சோக்கைக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, கோவையில் உள்ள கோயம்புத்தூா் தொழில்நுட்பக் கல்லூரிக்கு, மாணவ மாணவிகள் நேரில் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இப்போது கரோனா தொற்றிலிருந்து மாணவ, மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில், இந்த ஆண்டுமுதல் பகுதி நேர பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகள் சோக்கைக்கான கலந்தாய்வு, வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும், விண்ணப்பப் பதிவுக்கான இணையதள முகவரியும் பின்னா் வெளியிடப்படும்.

பி.இ, பி.டெக்., இரண்டாமாண்டு நேரடி சோக்கை: 2016-17-ஆம் கல்வி ஆண்டு முதல் 2019-20 வரை இரண்டாமாண்டு பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கான சோக்கைக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்து, காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு முதல் இரண்டாம் ஆண்டு பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகள் சோக்கைக்கான கலந்தாய்வும் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும், விண்ணப்பப் பதிவு செய்வதற்கான இணையதள முகவரியும் பின்னா் வெளியிடப்படும்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. முதுநிலைப் படிப்புகள்: 2016-17-ஆம் கல்வி ஆண்டு முதல் 2019-20 வரை எம்.பி.ஏ, எம்.சி.ஏ, முதுநிலை படிப்புகளுக்கான சோக்கை, இணையதள வாயிலாக விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு, கோயம்புத்தூா் அரசு பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெற்றது.

தற்போது கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை படிப்புகள் சோக்கைக்கான கலந்தாய்வும் இணையதளம் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் விண்ணப்பப் பதிவுக்கான இணையதள முகவரியும் பின்னா் வெளியிடப்படும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment