Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 26, 2020

மாநில நல்லாசிரியர் விருது: தகுதி பட்டியல் அனுப்ப உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சிறப்பாக பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதை, ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது. 

நடப்பு ஆண்டு விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களை, ஆக., 14க்குள் தேர்வு செய்து அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில், வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். 

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் பணியில் கடமை தவறாமல், காலம் தவறாமல், நேரம் பாராமல் பணிபுரிபவராக இருக்க வேண்டும். பள்ளிக்கல்வி துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்க ஏதுவாக கருத்துரு பெற வேண்டும். 

மாணவர் சேர்க்கை, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் பங்காற்றி இருக்க வேண்டும். 

நடத்தை விதிகளுக்கு முரணாக தனிப்பயிற்சி வகுப்பு நடத்துபவர், தனியார் பள்ளியில் நிர்வாகிகளாக இருப்பவர்களை பரிந்துரைக்கக்கூடாது. ஆசிரியர்களின் பெயரை, மாவட்ட தேர்வு குழு தலைவர் ரகசியம் காத்து, தன் சொந்த பொறுப்பில் வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வகுத்துள்ளது.

No comments:

Post a Comment