Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 9, 2020

விட்டமின் டி குறைபாட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்?


தினம் தினம் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான வைட்டமின்கள் எளிமையாக மற்றும் சூரியஒளியினால் கிடைக்கப்பெறுவது வைட்டமின் டி. இந்த வைட்டமின் காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் இயற்கையாகவே நமது உடலின் மீது பட்டு, நமது உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை வழங்குகிறது.

நமது இந்திய நாட்டில் இயற்கையான வெப்பம் மண்டல பகுதியை கொண்டதால் வருடத்தின் அனைத்து நாட்களிலும் சூரிய ஒளியானது தடையின்றி கிடைக்கிறது. இருந்தாலும், நமது நாட்டில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சனையானது அதிகளவில் இருந்து வருகிறது. சுமார் 70 விழுக்காடு நபர்கள் வைட்டமின் டி குறைபாடுகளை கொண்ட நபர்களாகவே இருந்து வருகின்றனர்.

இது குறித்த ஆய்வை மேற்கொண்ட சமயத்தில் உலகளவில் சுமார் 100 கோடி நபர்களுக்கு இந்த பிரச்சனை இருந்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் இரவு நேரத்தில் தாமதமாக உறங்க செல்வது, காலையில் இருக்கும் சூரிய வெளிச்சம் உடலிலேயே படாமல் இருப்பது, நீண்ட நேரத்தை குளிரூட்டப்பட்ட அறையில் கழிப்பது, சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் தவறான உணவுப்பழக்கம் போன்றவை இந்த வைட்டமின் டி பற்றாக்குறைக்கு காரணமாக அமைகிறது.


வைட்டமின் டி ஆனது பிற வைட்டமின்களை போல இருக்காமல், உடலில் இருக்கும் உயிரணுக்கள் மற்றும் ஹார்மோன்களின் செயல்படும் பெரும் பங்கு வகிக்கிறது. இதன் மூலமாக இரத்த அழுத்தும், மன அழுத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படுத்தப்பட்டு, சருமத்தின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாது தசைவலி, முதுகுவலி, உடற்சோர்வு, மன அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளும் வைட்டமின் டி குறைபாடால் ஏற்படும் பிரச்சனைகளே ஆகும். அதிக எடை கொண்ட நபர்கள், அதிக உடல் பருமன் கொண்ட நபர்கள், மீன் உணவுகளை தவிர்ப்பவர்கள், பால் பொருளை தவிர்ப்பவர்கள் மற்றும் சூரிய ஒளியை தவிர்ப்பவர்கள் என அனைவரும் இந்த வைட்டமின் டி குறைபாடுகளுக்கு ஆளாக நேரிடும்.

No comments:

Post a Comment