Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

FIT INDIA -வில் இணைய பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு.


'பிட் இந்தியா' இணையதளத்தில், அனைத்து பள்ளி விவரங்களும் உள்ளீடு செய்ய வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, 'பிட் இந்தியா' இயக்கத்தை மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. மேலும், இனி ஆண்டுதோறும் ஆக., 29ம் தேதி 'பிட் இந்தியா' தினமாக கொண்டாட அறிவுறுத்தியது.

இதுதொடர்பாக பள்ளிகள், கல்லுாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதனை, www.fitindia.gov.in இணையதளத்தில் பதிவிட வேண்டும். இதன் அடிப்படையில் பள்ளி கல்லுாரிகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களும் இவ்விணையதளத்தில் தங்கள் விவரங்களை, ஜன., 24க்குள் உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் இதுவரை, குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன. எனவே இதுவரை மேற்கண்ட இணையதளத்தில், பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், உடனே பதிவேற்றம் செய்ய, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளன.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும், www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment