Join THAMIZHKADAL WhatsApp Groups

ஜே.இ.இ., நுழைவு தேர்வில், விண்ணப்ப விபரங்களை திருத்த, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தேசிய உயர் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த நுழைவு தேர்வு, ஏப்ரலில் நடத்தப்பட இருந்தது.
இதற்கான, 'ஆன்லைன்' வசதி, நேற்று துவங்கியது. வரும், 15ம் தேதி வரை, விண்ணப்ப விபரங்களை திருத்தலாம். தேர்வு மையத்துக்கான நகரங்களை விருப்பம் போல தேர்வு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment