Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 2, 2020

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு !! புதிய அறிவிப்பை வெளியிட்ட UPSC...



கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐ.ஏ.எஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடத்தப்படும்.

10 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதும் இந்தத் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு குறித்தும் இன்னும் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில், நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள upsconline.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என UPSC அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment