JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. மாணவர்கள் மதிப்பெண் பட்டியல்களை அந்தந்த பள்ளிகளில் நேரில் பெற்று கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களுக்கு சென்று மதிப்பெண் பட்டியல்களை பெறலாம். வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை அந்தந்த பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியலில் கையொப்பமிட்டு வழங்க வேண்டும். . மாணவர்கள் விரும்பினால் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 1 மணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரையும், பிளஸ் 2 மாணவர்கள் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் 275, உயிரியல் பாடத்துக்கு மட்டும் ₹305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 205 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment