Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 20, 2020

10, பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கு அடுத்த மாதம் துணைத்தேர்வு! - தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு

10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு அடுத்த மாதம் நடத்தப்படும் என்று தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, “வருகிற செப்டம்பரில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வுகளுக்கு, தனித்தேர்வர்களும், பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த, வருகைபுரியாத தேர்வர்களும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


மார்ச்-2020 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், செப்டம்பர்-2020 துணைத்தேர்வை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மார்ச் 2020 பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும், 2020-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும் துணைத்தேர்வு எழுத கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுகள் சேவை மையங்களுக்கு வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சென்று விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், மார்ச் 2020 பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதி, தேர்ச்சிபெறாத மற்றும் வருகை புரியாதவர்கள், தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கும் வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

10ம் வகுப்புக்கான துணைத்தேர்வு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரையிலும், பிளஸ்1-வகுப்புக்கான தேர்வு செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 7-ந் தேதி வரையிலும், பிளஸ்-2 வகுப்புக்கு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையிலும் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment