Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 10, 2020

10ம் வகுப்பு 'ரிசல்ட்' இன்று வெளியீடு


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, இன்று(ஆக., 10) வெளியாகிறது.தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல் நடக்கவிருந்த தேர்வு, கொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்றும், பள்ளி கல்வித் துறைஅறிவித்தது.அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண் விபரம், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியாகிறது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 17 முதல், 21 வரை, பள்ளிகளில் வழங்கப்படும்.

மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம்.

மதிப்பெண் சாா்ந்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பினும் அதுதொடா்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இணையதளத்தில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தோவுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment