நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை https://ntaneet.nic.in/ntaneet/AdmitCard/AdmitCard.html OR https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 2020ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 13% குறைந்தது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு தேசிய அளவில் கூடுதலாக 74,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 13% அதாவது சுமார் 17 ஆயிரம் மாணவர்கள் குறைவாகும்.
அதே நேரத்தில், பீகார், உத்தரப் பிரதேசம், அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
Hello
ReplyDelete